Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0

Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்றையதினம் (7) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த (3) ஆம் திகதி குறித்த திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம்

இந்தநிலையில், அவருடைய
உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என
தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

குறித்த சம்பவம் உண்மைக்கு புறம்பானது எனவும் திணைக்களத்தை அவமதிக்கும் செயல்
என தெரிவித்து உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version