Home சினிமா நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? அவரே சொன்ன விஷயம்.. போட்டோஸ் வைரல்

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? அவரே சொன்ன விஷயம்.. போட்டோஸ் வைரல்

0

ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா சில தினங்களுக்கு முன் திருமண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்” என்று பதிவு செய்திருந்தார்.

இதை கண்ட ரசிகர்கள் ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? என்று அதிர்ச்சியில் இருந்தனர்.

பேரனின் முதல் மைல்கல்.. வைரலாகும் ரஜினிகாந்தின் எமோஷ்னல் பதிவு

சொன்ன விஷயம்

இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டா பக்கம் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ” எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்” என்று கூறி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவருடைய திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.   

     

NO COMMENTS

Exit mobile version