Home இலங்கை அரசியல் பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா எம்.பி

பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்பவருக்கு  விட்டுக் கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான முகப்புத்தக (facebook) பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

சுயேட்சைக் குழு

அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும்.

எவ்வாறாயினும் அர்ச்சுனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப்போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் விளக்கவில்லை. 

https://www.youtube.com/embed/m66Y6JaZtNs

NO COMMENTS

Exit mobile version