பாக்கியலட்சுமி
கடந்த 2020ம் ஆண்டு விஜய் டிவியில் கொரோனா பதற்றத்திற்கு நடுவில் ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் பாக்கியலட்சுமி.
ஜுலை மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் தொடரில் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறார்கள்.
இப்போது கதையில் இனியா போலீசாரால் கைது செய்யப்பட இந்த கதைக்களம் பரபரப்பாக ஓடும் என தெரிகிறது.
நடிகரின் பதிவு
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அட்டகாசமாக நடித்துவரும் கோபி என்கிற சதீஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். ராதிகா இல்லாமல் பாக்கியா குடும்பத்துடன் கோபி புகைப்படம் எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கோபி அப்போது ராதிகா நிலைமை என்ன, பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்துவிட்டீர்களா என்றும் எல்லோரும் புகைப்படம் எடுத்துள்ளீர்களே ஒருவேளை பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வர போகிறதா என நிறைய கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் சதீஷ் சீரியல் முடிவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.