Home இலங்கை அரசியல் தமிழருடன் ஒற்றுமைக்கு தமிழர் கதைத்தால் குற்றமா..!

தமிழருடன் ஒற்றுமைக்கு தமிழர் கதைத்தால் குற்றமா..!

0

அநுர அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான தீர்வு அறவே அற்றுப்போகும் என்ற சூழல் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதுகாலவரை எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி தனித்து அரசியல் செய்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தற்போது இறங்கி வந்து அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டுள்ளார்.இதன்படி செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிறீதரன் ஆகியோருடன் அவர் சந்திப்பை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய நிலையில் அதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதாவது இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சிறீதரனுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சந்திப்பை மேற்கொள்ள கட்சி சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை எனதெரிவித்துள்ளார்.

அப்டியென்றால் அநுர அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய அரசமைப்பு தொடர்பாக தான் நான்கு தடவை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அவருக்கு கட்சி ஜனாதிபதியுடன் சந்திக்க அனுமதி வழங்கியதா..! என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்

அநுர அரசு கொண்டுவரவுள்ள அரசமைப்பில் தமிழர்களுக்கான தீர்வு அற்றுப்போய்விடும் அதனை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியாக நின்று எதிர்க்க வேண்டும் என்ற நல்ல முயற்சி கூடாதா..! 
எனவும் அவர்கள் கேட்கின்றனர்

இதுவும் ஒருவகை ஏக்கிய ராஜ்ஜிய கதைதான் தமிழில் ஒரு வார்ததை சிங்களத்தில் மற்றுமொரு வார்த்தை.

என்னப்பா தமிழரின் ஒற்றுமைக்கு தமிழருடன் பேசுவது குற்றமென்றால் அல்லது கொதித்தெழுந்தால் தமிழருக்கு தீர்வையே வழங்க முயலாத சிங்கள தலைவர்களுடன் பேசுவது மட்டும் நியாயமா என வெகுஜனம் கேட்பதிலும் ஒருவகை நியாயம் இருப்பது போல்தான் தெரிகிறது..!  

NO COMMENTS

Exit mobile version