மெஹ்ரீன் பிர்சாடா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருப்பவர் தான் மெஹ்ரீன் பிர்சாடா.
கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான Krishna Gaadi Prema Gaadha என்ற படத்தின் மூலம் நடிப்பதை தொடங்கியவர் அடுத்தடுத்து வெற்றிகரமான படங்கள் நடித்து வருகிறார்.
OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருக்கு சொகுசு கார் பரிசு கொடுத்த பவன் கல்யாண்
தமிழில் பட்டாஸ், இந்திரா போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவரது படம் குறித்த தகவல் வருகிறதோ இல்லையோ ஒரு வதந்தி வைரலாகி வருகிறது.
நடிகை காட்டம்
அப்படி என்ன வதந்தி என்றால் மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு ரகசியமாக அவரது காதலருடன் திருமணம் நடந்துவிட்டது என்பது தான். இதுகுறித்து மெஹ்ரீன் பிர்சாடா கூறியிருப்பதாவது, சமீபகாலமாக நிறைய வதந்திகள் அதிகம் பகிரப்படுகிறது.
சில முட்டாள்தனமான பணம் கொடுத்து எழுதப்பட்ட கட்டுரைகளால் பத்திரிக்கைத்துறையின் மதிப்பே குறைந்து வருகிறது. நான் தற்போது சிங்கிளாக இருக்கிறேன்.
ஆனால், நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தால், நம்புங்கள், அந்த விஷயத்தை நானே அதிகாரப்பூர்வமாக இந்த உலகிற்குத் தெரிவிப்பேன். அதுவரை இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
