பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் பலர் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிறார்கள்.
அப்படி தான் டாப் நடிகை ஒருவர் தனது காதலருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறியிருந்தார். அவர் வேறுயாரும் இல்லை, நடிகை நிவேதா பெத்துராஜ் தான்.
இவர் பிரபல தொழிலதிபர் ரஜித் இப்ரானை திருமணம் செய்ய இருப்பதாக கூறி அவருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
போட்டோஸ் நீக்கம்
அடுத்து திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் சமூக பிரச்சனைகள் குறித்து நிறைய பேசி வந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார், அதோடு அவரை Unfollow செய்துள்ளார். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
