Home சினிமா ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படம் டிராப் ஆனதா?… வெளிவந்த தகவல்

ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படம் டிராப் ஆனதா?… வெளிவந்த தகவல்

0

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜேவாக மக்கள் மனதில் இடம் பிடித்த பின் தன்னை ஒரு நடிகராக நிரூபித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.

40 வயதாகும் பாலாஜி, நடிகர், இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இவரது பேட்டிகள் பார்த்தாலே மிகவும் ஆரோக்கியமான விஷயங்களாக ரசிகர்கள் கேட்கும் படி இருக்கும், ஒரு பாசிட்டீவான நபர்.

இவரது இயக்கத்தில் தற்போது சூர்யா நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கான பெயர், ஃபஸ்ட் லுக் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளது.

டிராப் ஆனதா

படங்கள் இயக்குவதை தாண்டி மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அப்படி அவர் அம்மா முத்து சூர்யா இயக்கத்தில் நடித்துவரும் படம் தான் ஹேப்பி என்டிங். காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படம் பக்கம் வருவதில்லை என்றும் படம் டிராப் என்றும் பேச்சுகள் அடிபடுகிறது. படம் குறித்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தினாலும் ரசிகர்கள் படம் பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version