சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி இருந்தது, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது, சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சூர்யா அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
ஹீரோயினாக ஆசை இல்லை, ஆனால்.. ஓப்பனாக சொன்ன கூலி நடிகை மோனிஷா பிளெஸ்சி
அரசியலில் சூர்யா?
இந்நிலையில், சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக தொடர்ந்து செய்திகள் வலம் வர, இதற்கு சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
அதில், ” வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
சினிமா, மற்றும் அகரம் சூர்யாவுக்கு இப்போதைய போதுமான நிறைவைத் தந்துள்ளது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.@Suriya_offl @rajsekarpandian pic.twitter.com/A8K4caAZDP
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) August 20, 2025
