Home இலங்கை குற்றம் இசாரா செவ்வந்தியின் தாய் சிறைச்சாலையில் மரணம்

இசாரா செவ்வந்தியின் தாய் சிறைச்சாலையில் மரணம்

0

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இசாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாய் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மாரடைப்பு காரணமாக கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதுவரையில் பொலிஸாரினால் கைது

இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இசாராவின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த இசாராவின் தாய் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட இசாராவை இதுவரையில் பொலிஸாரினால் கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version