Home இலங்கை அரசியல் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திடீர் திருப்பம்! இஷாரா செவ்வந்தி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திடீர் திருப்பம்! இஷாரா செவ்வந்தி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரைப் பற்றிய சில தகவல்கள் ஏனைய சந்தேக நபர்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு

அத்துடன் குறித்த கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறிய அமைச்சர், தாக்குதல் குறித்து முன்கூட்டியே எந்த குறிப்பிட்ட தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாகவும், அதனால்தான் அவர் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version