கடந்த மாதம் ஈரான்(iran) மீது இஸ்ரேல் (israel)நடத்திய விமான தாக்குதலில் ஈரானின் இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டது என்று அமெரிக்கா(us) மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் ஒக்டோபர் 25 தாக்குதல்களால் ஈரானின் அணு ஆயுத இரகசிய தளமான தலேகான் 2 தளம்( Taleghan 2) இரண்டு இடிபாடுகளாக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க அதிகாரிகளின் கண்டுபிடிப்பு
தெஹ்ரானில் இருந்து கிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள இந்த தளம், அணுகுண்டை வெடிக்க தேவையான வெடிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு திட எரிபொருளைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று அருகிலுள்ள கட்டிடங்களையும் இஸ்ரேல் அழித்ததாக அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் தொடங்கிய ஆராய்ச்சி
பாரிய பார்ச்சின் இராணுவ வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தலேகான் 2, கடந்த 2003 ஆம் ஆண்டில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க உளவுத்துறை, ஈரானிய விஞ்ஞானிகள் “அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும்” ஆராய்ச்சி நடத்துவதைக் கண்டறிந்தது.
தலேகான் 2 வசதி மிகவும் இரகசியமாக இருந்தது, ஈரானிய ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே தளத்தின் உண்மையான நோக்கம் தெரியும்.
தளத்தில் செயல்பாடு கண்டறியப்பட்ட பின்னர், அமெரிக்கா, ஈரானிய ஆட்சிக்கு தனிப்பட்ட எச்சரிக்கையை அனுப்பியது. அதன் பிறகு ஈரான் செயல்பாடுகளை நிறுத்தும் என்று நம்பப்பட்டது, ஆனால் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்ந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை மாதம், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் காங்கிரஸிடம் ஒரு அறிக்கையை கையளித்தார், அது ஈரான் “அணுசக்தி சாதனத்தை உருவாக்க விரும்பினால், அதை சிறப்பாக நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்று எச்சரித்தார்.
ட்ரம்ப் எடுக்கப்போகும் கடும் நிலைப்பாடு
உலகத் தலைவர்களால் “எங்களைத் தடுக்க முடியாது” என்று ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கூறிய போதிலும், ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை வைத்திருப்பதை பலமுறை மறுத்துள்ளது.
இதேவேளை டொனால்ட் டிரம்ப்(donald trump) ஜனவரியில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும், அவர் ஜனாதிபதி ஜோ பைடனை விட ஈரான் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.