ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் வெளிநாட்டு பயண விடுமுறை: ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம்
தாக்குதலுக்கு பதிலடி
ஈரானின் ஆளில்லா விமானம் மற்றும் பால்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது என்பது தெளிவாகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலியர்கள் உடனே பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும் அவர்கள் பதிலடி கொடுக்க தயாரிகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|