Home உலகம் ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

0

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவிறே்றதும், உக்ரைனில் ரஷ்யாவின் போர் “வேகமாக” முடிவுக்கு வரும் என்று என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையை வழிநடத்தும் ட்ரம்ப் நிர்வாக குழுவின் கொள்கையுடன் போர் வேகமாக முடிவடையும் என ஜெலென்ஸ்கி வலியுறுத்திள்ளார்.

இராஜதந்திர வழிமுறை

அதன் போது, உக்ரைனின் பங்கிற்காக அடுத்த ஆண்டு இராஜதந்திர வழிமுறைகள் மூலம் போர் முடிவடைவதை உறுதி செய்ய தாங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணயில், இரண்டாவது முறையாகவும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியிருக்காது என்று பலமுறை கூறி வந்தார்.

ஒரே நாளில் போருக்கு முடிவு 

இதேவேளை, கடந்த ஜூலை மாதம், அவர் ஒரே நாளில் உக்ரைன்-ரஷ்யா போரைத் தீர்த்துவிட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு ஜோ பைடனின் நிர்வாகம் அனுமதியளித்துள்ள நிலையில், அண்மைகாலமாக போர் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     

NO COMMENTS

Exit mobile version