Home உலகம் போரை முடித்து வைத்துள்ளோம்..! ஈரான் அறிவிப்பு: வெற்றியை கொண்டாடும் மக்கள்

போரை முடித்து வைத்துள்ளோம்..! ஈரான் அறிவிப்பு: வெற்றியை கொண்டாடும் மக்கள்

0

ஈரானிய மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக தெரிவித்து வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரங்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று நமது மாபெரும் ஈரான் தேசத்தின் வீரமிக்க எதிர்ப்பிற்குப் பிறகு அதன் உறுதியான நிலைப்பாடு வரலாற்றை உருவாக்கி உள்ளது.

ஆத்திரமூட்டும் செயல்

இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் செயல்களால் திணிக்கப்பட்ட இந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்

ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை

கட்டாரில் அமெரிக்கா கொண்டிருக்கும் மிகப்பெரிய ராணுவத் தளமான ‘அல் உதெய்த்’ மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குள், அதற்குப் பதிலளிக்காமல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என போர் நிறுத்தத்திற்கு, பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வந்த போது, ”ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல.

ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தார்.


you may like this


https://www.youtube.com/embed/s6Ft0SkBbs8https://www.youtube.com/embed/TghB75P6prA

NO COMMENTS

Exit mobile version