Home முக்கியச் செய்திகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் ட்ரம்ப்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

மகிழ்ச்சியின் உச்சத்தில் ட்ரம்ப்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

0

அமைதிக்கான நோபல் பரிசுக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald trump) பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் (Iran) இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு 

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது மேற்கொண்ட அமைதிக்கான முயற்சிகள் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வழங்க பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஈரானின் போர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய 3 அணுசக்தி தளங்களை தாக்குதல் நடத்தி அமெரிக்கா முற்றிலுமாக அழித்துள்ளதையடுத்து டிரம்புக்கான நோபல் பரிந்துரை மீது பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

https://www.youtube.com/embed/Iqa6QotD6XY

NO COMMENTS

Exit mobile version