இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), டெஹ்ரானின் கொடுங்கோலர்கள் முழு விலையையும் செலுத்துவார்கள் என எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய (Iran) ஏவுகணை தாக்குதல் நடந்த வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்திற்கு அருகிலுள்ள இடத்தை நேற்று (20) பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார்.
இந்த தாக்குதலில் இரண்டு கட்டடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன் மேலும் தெற்கு இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையும் பாதிக்கப்பட்டிருந்தது.
தீய ஆட்சி
இந்தநிலையில், ஈரானை தீய ஆட்சி என குறிப்பிட்டு எச்சரித்த அவர், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் உளவுத்துறை தளத்திற்கும் சென்று, ஈரானில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளுக்கு உளவுத்துறை அதிகாரிகளை பாராட்டினார்.
நாங்கள் போர்களை வெல்லும் உளவுத்தகவல்களை வழங்குவதற்கு புனிதமான பணியைச் செய்யும் வீரர்களுடன் நான் இங்கு இருக்கிறேன் எனவும் அவர் குறிபபிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சர்
இந்த நிகழ்வு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் ஜெனீவா அறிக்கைகளுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் உள்ளதாக சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கு அவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்பட்டால் இராஜதந்திரத்தை பரிசீலிக்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நெதன்யாகுவின் கருத்துகள் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
