Home உலகம் அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

0

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி (Ali Shadmani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜெனரல் அலி ஷத்மானி ஈரானின் மிக உயர்ந்த பதவியில் இருந்த இராணுவ அதிகாரி எனவும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Sayyid Ali Hosseini Khamenei) நெருங்கிய இராணுவ ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்

லெப்டினன்ட் ஜெனரல் கோலமாலி ரஷீத் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அலி ஷத்மானி கொள்ளப்பட்டுள்ளார்.

ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் 

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமான உலக நாடுகள் அச்சத்தை எதிர் நோக்கியுள்ளனர். 

இவ்வாறான பின்னணியில் மூத்த இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானியின் மரணத்தை ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

NO COMMENTS

Exit mobile version