Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

0

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பல்வேறு போலி செய்தி வெளிவந்துள்ளது.

அத்துடன் தவறான செய்தி அறிக்கைகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எண்ணெய் இருப்பு 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், முன்கூட்டியே விண்ணப்பித்த எண்ணெய் இருப்புகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, போலிச் செய்திகளால் தவறாக பரப்ப வேண்டாம் என அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது.

NO COMMENTS

Exit mobile version