Home உலகம் ஹிஸ்புல்லா நிலைகளின் மேல் இஸ்ரேல் கோர தாக்குதல் (காணொளி)

ஹிஸ்புல்லா நிலைகளின் மேல் இஸ்ரேல் கோர தாக்குதல் (காணொளி)

0

லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) இஸ்ரேல் (Israel) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல், ஏவுகணைகளை சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் c (Hezbollah) அமைப்பின் கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 5 மாதங்களுக்கு முன்னர் இருதரப்பு போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், உடன்படிக்கையை மீறி நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை உருவானது.

வான்வழித் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏவுகணைகளை சேமித்து வைத்திருக்கும் கட்டிடத் தொகுதியை குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்த லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஒன், போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்திய அமெரிக்கா (United States) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகளிடம் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version