Home உலகம் கதிகலங்கி நிற்கும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கையொன்றை விடுத்த நெதன்யாகு

கதிகலங்கி நிற்கும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கையொன்றை விடுத்த நெதன்யாகு

0

தங்களை யார் காயப்படுத்தினாலும், பதிலுக்கு தாங்களும் அவர்களை காயப்படுத்துவோம், என ஈரானை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்துள்ளார்.

ஈரான் (Iran) மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்கள் அதன் பாதுகாப்பு திறன்களை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் இன்று (27) குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பாதுகாப்புத் திறன்

இந்த மாத தொடக்கத்தில் ஈரானிய பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் உறுதியாக பதிலடி கொடுக்கும் என பிரதமர் நெதன்யாகு உறுதியளித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலையில், “நாங்கள் எங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றினோம், ஈரானின் பாதுகாப்புத் திறனையும், எங்களுக்கு எதிராகச் செயல்படும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறனையும் கடுமையாக சேதப்படுத்தினோம்” என்று நெதன்யாகு அறிவித்தார்.

அமெரிக்க உதவி

அத்தோடு, ஈரான் மீதான இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உதவிக்கு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு, தாக்குதல்கள் சரியான இலக்குகளை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் இஸ்ரேலுடன் நெருக்கமாக ஆலோசனை செய்து வருவதாக பைடன் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version