Home இலங்கை சமூகம் இலங்கையில் இஸ்ரோ – கோப்பர்நிக்கஸ் சற்லைற்றுகளின் பரபரப்பு படம் பிடிப்பு! 2.0 கட்டமைப்புகள் தீவிரம்

இலங்கையில் இஸ்ரோ – கோப்பர்நிக்கஸ் சற்லைற்றுகளின் பரபரப்பு படம் பிடிப்பு! 2.0 கட்டமைப்புகள் தீவிரம்

0

இலங்கையில் தென்கிழக்கு காற்றுச்சுழற்சியும் தென்மேற்கு பகுதி வளிமண்டல தளம்பல் நிலைகளும் இணைந்து நேற்று மாலை முதல் 36 மணித்தியாலங்களுக்கான கடும்மழை பொழிவு நிலவரத்தை உருவாக்கியுள்ள நிலையில் இந்தியாவின் இஸ்ரோ செய்மதியும் ஐரோப்பாவின் கோப்பர்நிக்கஸ் செய்மதியும் போட்டிபோட்டுக்கொண்டு இலங்கையை படம் பிடிக்கும் நிலைமையொன்றை தித்வா சூறாவழிக்கு பின்னரான நிலைமைகள் உருவாக்கியுள்ளன.

இலங்கையில் உடனடியாக ஒரு 2.0 தேசிய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய இக்கட்டான நிலையில் சிறிலங்கா இருப்பதால் நிகழ்நேர வானிலை கண்காணிப்பு மற்றும் சமூக எச்சரிக்கைகளுடன் பிணைக்கப்படும் கட்டமைப்புக்களுக்கான செய்மதிகளின் 2.0 போட்டி ஆரம்பிக்கின்றது.

இனிமேல் இலங்கை மீது திரளும் முகில் கூட்டம் முதல் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை உருப்பெருக்கி பார்க்கும் 2.0 திட்டங்கள் உள்ளநிலையில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி முதல் இலங்கையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண வினியோகத்தில் சளைக்காமல் ஈடுபட்ட இந்திய வான்படையின் இரண்டு MI-17 ரக உலங்குவானூத்திகள் கட்டாய பராமரிப்பு பணிக்காக இந்தியா திரும்பிய அந்த இடத்தை நிரப்ப இன்னொரு MI-17 ஹெலியை டெல்லி அனுப்பியுள்ளது.

இலங்கைக்கு இதுவரை 4 பெய்லி பாலங்கள் அனுப்பட்ட நிலையில் அதில் ஒன்றை பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் பொருத்த இந்திய இராணுவ பொறியியல் பிரிவு கடும் மழைக்குள்ளும் வேலைபார்க்கும் நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது இன்றைய செய்திவீச்சு… 

https://www.youtube.com/embed/haNWNsO9ko8

NO COMMENTS

Exit mobile version