சூப்பர் சிங்கர்
பாடும் திறமை கொண்டவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்த ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி நடக்கும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது பெரியவர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த சீசன் தயாரிப்பு குழு, நடுவர்கள், கான்செப்ட் என அனைத்துமே பழைய சீசன்களை விட மாறியுள்ளது.
டாப் 10
கடைசியாக இந்த சூப்பர் சிங்கர் 11வது சீசனில் என்றும் மக்களால் மறக்க முடியாது சில்க் ஸ்மிதா ரவுண்ட் நடந்தது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்… ஜனனி ஓபன் டாக்
இதில் போட்டியாளர்கள் அனைவரும் அட்டகாசமாக பாடி நடுவர்களை கவர்ந்துவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீசன் பைனலை நோக்கி ஒளிபரப்பாகிறது.
24 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோவில் இப்போது டாப் 10 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற லிஸ்ட் இதோ,
- மீனாட்சி
- அன்பென்சன்
- தர்ஷனா
- திஷாதனா
- பாலாப்ரியா
- தவசீலினி
- நிகில்
- சரண்
- ஆப்ரஹாம்
- பர்ஹான்
