Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

இன்று முதல் தினமும் 1000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை

இந்த நிலையில், இவ்வாறு பல நாட்களாக தங்கி இருக்கும் மக்களுக்கு டோக்கன் கார்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது மட்டுப்படுத்தப்பட்டதாலும், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் வரிசைகள் உருவாகியுள்ளனர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version