நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நாளை (28) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கையளிக்கப்படவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசி வழங்கப்படும் என பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்த போதிலும், இதுவரையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசிய நுகர்வோருக்கு சென்றடைய வில்லை.
பணிப்புரை
மேலும், சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை, சிவப்பு அரிசி உள்ளிட்ட 30 வகையான அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அரிசி உற்பத்தியாளர்களின் கையிருப்பு விபரங்களை சேகரித்து உடனடியாக அறிக்கையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் பாரிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளில் சோதனை செய்ய நேற்றிலிருந்து (26) ஆரம்பித்துள்ளனர்.