Home இலங்கை அரசியல் மத்திய குழு உறுப்பினர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

மத்திய குழு உறுப்பினர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நாளை (05) கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

மத்திய குழு

இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல்
தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில்
இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கும்
இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version