Home இலங்கை அரசியல் தமிழரின் இருப்பை தக்க வைக்கின்ற ஆண்டாக 2025 அமைய வேண்டும்! சிறீதரன்

தமிழரின் இருப்பை தக்க வைக்கின்ற ஆண்டாக 2025 அமைய வேண்டும்! சிறீதரன்

0

2025ஆம் ஆண்டு மாற்றங்கள் நிறைந்த தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும்
ஆண்டாக மலர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின்(ITAK) கிளிநொச்சி(Kilinochchi) கிளையின் ஏற்பாட்டில் நத்தார் தின
நிகழ்வும் ஆண்டிறுதி ஒன்று கூடல் நிகழ்வும் கட்சி அலுவலகத்தில் நேற்று(29) நடைபெற்ற போதே  அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழரின் இருப்பு

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

2025ஆம் ஆண்டு தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கின்ற
தமிழரின் இருப்பை தக்க வைக்கின்ற ஆண்டாக அமைய வேண்டும் கடந்த காலங்களில்
நிகழ்ந்த அனுபவங்களை வைத்து கட்சிக்குள்ளும் சரி கட்சிக்கு வெளியிலும் சரி
சவால்களை எதிர்கொண்டு பயணிப்போம்.

புதிய அரசாங்கம் அரசியல் தீர்வு முயற்சியில் எந்தவொரு நல்லெண்ணத்தையும்
வெளிப்படுத்தவில்லை கருத்துக்களை சொல்வதாகவே இருக்கிறது. அதற்கான முயற்சிகளை
முன்னெடுக்கவில்லை ஆனால் வருகின்ற ஆண்டு புதிய அரசியலைப்பு கொண்டு வருவதாக
சொல்கின்றனர்.இது தொடர்பாக கரிசனையோடு இருக்கின்றோம்.

புதிய தீர்வை தரவேண்டும் அதற்காக
இணைந்து பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version