இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நேற்று (03.06) நடைபெற்றுள்ளது.
சத்தியப் பிரமாணம்
இதன்போது, வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட்டு
வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது
சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர்
எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியவர்களின்
முன்னிலையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கட்சியின்
ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
