Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகும் முக்கிய செயற்பாட்டாளர் : வெளியான அறிவிப்பு

தமிழரசுக் கட்சியிலிருந்து விலகும் முக்கிய செயற்பாட்டாளர் : வெளியான அறிவிப்பு

0

இலங்கைத் தமிழரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு
வெளியேறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளரான அலஸ்ரின் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று (18) அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட பதிவின் ஊடாக இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியிலிருந்து விலகல் 

மேலும் அவர் தனது தீர்மானத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய முகநூல் பதிவில், ”18.03.2025 இன்று நான் உயிரிலும் மேலாக
நேசித்த இலங்கைத் தமிழரசு கட்சியை விட்டு முற்றுமுழுதாக வெளியேறுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முள்ளியான் வட்டாரத்தில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடே பி.அலஸ்ரின் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this 

https://www.youtube.com/embed/XH0TveCN_ic

NO COMMENTS

Exit mobile version