Home இலங்கை அரசியல் மட்டு. அபிவிருத்திக்கான ஒப்புதல் : தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடும் ஆட்சேபனை

மட்டு. அபிவிருத்திக்கான ஒப்புதல் : தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடும் ஆட்சேபனை

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமல் மேலதிக ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் (E. Srinath)கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (29.03.2025) நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிப் பங்கீடுகளின் போது சக நாடாளுமன்ற
உறுப்பினர்களையும், குறிப்பாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய
கருத்துக்களையும், அவர்களுடைய அபிவிருத்தி முன்மொழிவுகளையும் உள்ளடக்கி இந்த
நிதி பங்கீடானது எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

காரணம் இதில் கட்சி சார்ந்த அரசியலோ அல்லது தனிப்பட்ட விடயங்களோ இடம்பெற கூடாது என்பதே ஆகும்.

இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/x9YIm2Ry0aY

NO COMMENTS

Exit mobile version