திருகோணமலை (Trincomalee) மாநகர சபை மேயராக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கந்தசாமி செல்வராசா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த குகதாசன், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரசு
கட்சியினை சேர்ந்தவர்கள் ஒன்பது பேரும் ஒன்று கூடி திருகோணமலை மாநகர சபை
மேயராக ஜனநாயக ரீதியாக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவாகி பரிந்துரை
செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மாநகர மேயர் பதவி
கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த கந்தசாமி செல்வராசா, ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னை மேயராக பரிந்துரை செய்து தெரிவு
செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார
மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அத்துடன் மாநகர மேயர் பதவியின் பின்
திருகோணமலை நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி
திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் அனுபவம் மூலமாக எதிர்கால திட்டங்களை
நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
