Home இலங்கை அரசியல் சுமந்திரனின் பதவி முத்திரை தொடர்பில் வெடித்த சர்ச்சை

சுமந்திரனின் பதவி முத்திரை தொடர்பில் வெடித்த சர்ச்சை

0

இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) பதில் பொதுச் செயலாளராக காணப்படும் சுமந்திரன் (M. A. Sumanthiran), தான் தான் கட்சியில் முதல் என்பதை காட்டிக் கொள்வதாகவும், இதனால் தமிழரசு கட்சி அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது எனவும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். 

லங்காசறியின் (LankaSri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .

மேலும், தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், சுமந்திரன் கட்சி ரீதியில் வெளியிடும் கடிதங்கள் மற்றும் அறிவிப்புக்கள் அனைத்திலும், தனது பதவியை குறிப்பிடும் போது பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகின்றார். 

இது தான் தான் தமிழரசு கட்சியில் சர்வ வல்லமை படைத்தவர் என்கின்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

https://www.youtube.com/embed/z9H42xfDvVMhttps://www.youtube.com/embed/mxL4HIoObmMhttps://www.youtube.com/embed/DoSZE1RIQ4c

NO COMMENTS

Exit mobile version