Home இலங்கை அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

0

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல் வட்டாரஙடகளழலட தெரிவிக்கப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சலுகைகளை காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்த்தனவே அறிமுகப்படுத்தியிருந்தார்.

அதேபோல இலங்கையில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகளில் சிலர் அவற்றை பெற்றுக் கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச 

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்தே பல எதிர் கருத்துக்கள் வெளிவந்துள்ளன என கூறப்படுகிறது.

நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நிலையில் திரைசேறிக்கு இந்த செலவுகள் பெரும் சுமையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்த கொடுப்பனவு, செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு, உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு வசதி வழங்கல் என்பன இதனூடாக நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version