Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு முற்றுகை! களத்தில் எஸ்.டி.எஃப் சிறப்பு கமாண்டோக்கள்!

யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு முற்றுகை! களத்தில் எஸ்.டி.எஃப் சிறப்பு கமாண்டோக்கள்!

0

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை வீதியில் உள்ள ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமே குற்றவியல் தடுப்பு அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. 

குறித்த நடவடிக்கையானது நீதிமன்றின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள திடீர் பணக்காரர்கள் பற்றிய முக்கிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில், யாழ். மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள பல்வேறு தகவல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version