Home முக்கியச் செய்திகள் ஏழு பேர் காட்டிக்கொடுத்த போதைக்கப்பல்: யாழ்ப்பாணத்தை அதிர வைக்கும் கைதுகள்!

ஏழு பேர் காட்டிக்கொடுத்த போதைக்கப்பல்: யாழ்ப்பாணத்தை அதிர வைக்கும் கைதுகள்!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன் கைது செய்யப்படுபவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலே, இவ்வாறு கைது செய்யப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பின்னணியில் வடக்கைச் சேர்ந்தவர்கள் பலரும் உடந்தையாக இருந்துள்ளதாக தற்போது பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

தெற்கை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த பல போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளதை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான பின்னணியிலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் சரணடையவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

இவை உள்ளடங்கலாக வடக்கின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு………

https://www.youtube.com/embed/7Dk94L_dQgk

NO COMMENTS

Exit mobile version