Home இலங்கை கல்வி வணிகத்துறையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை

வணிகத்துறையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை

0

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட
ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் என்ற மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை தொடர்ந்த நிலையில், கணக்கீடு, பொருளியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து
பாடங்களிலும் அவர் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “க.பொ.த உயர்தரம் கற்கும் போது நான் பல சவால்களை எதிர்நோக்கினேன்.

அந்த சவால்கள் அனைத்தையும் எனவு பெற்றோரே நிவர்த்தி செய்தனர், இதானால் பெற்றோருக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள தம்பி தங்கைகளுக்கு நான் கூற முனைவது யாதெனில், நீங்கள் விரும்பி வர்த்தக துறையை தெரிவு செய்யுங்கள், அதில்
கடுமையாக முயற்சி எடுங்கள்.

உயர்தரத்தில் கற்கும் இரண்டு வருட கல்விதான்
வாழ்க்கையை தீர்மானிக்க போகின்றது என விளங்கி படியுங்கள், அப்போது வெற்றி
கிட்டும்.

சட்ட வல்லுனர் ஆவதே எனது கனவாக உள்ளது, அதற்கு ஏற்ப எனது பயணத்தை
ஆரம்பிக்கவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/CLxHpW2l3Kk

NO COMMENTS

Exit mobile version