Home இலங்கை அரசியல் திட்டமிட்டு அழிக்கப்படும் வட்டுக்கோட்டை: சிதம்பரமோகன் ஆதங்கம்

திட்டமிட்டு அழிக்கப்படும் வட்டுக்கோட்டை: சிதம்பரமோகன் ஆதங்கம்

0

வட்டுக்கோட்டையை (Vaddukoddai) திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை என கலாநிதி சிதம்பரமோகன் கடுமையாக சாடியுள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு
கூட்டமானது நேற்றையதினம் (13) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தந்தை செல்வா 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துங்கள், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக
மாற்றுங்கள்.

தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்றுவரை பொது
மலசலம்கூட இல்லை.

ஒரு காவல் நிலையம் மட்டும் உள்ளது, வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா?

நீங்கள் திட்டமிட்டு வட்டுக்கோட்டையை அழிக்கின்றீர்களோ தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version