யாழில் வன்முறைக்குழு ஒன்று வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (21.12.2025) இரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கைக்குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்த குடும்பத்தினர் மீது கொலைவெறி
தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மதுபோதையில் அச்சுறுத்தல்
வாள்கள், கத்தி, கற்களுடன் வருகை தந்த ஒரு குழுவினால் கட்டைக்காடு கிழக்கு
பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது வீட்டில் காணப்பட்ட உழவியந்திரம், வாகனம் வீட்டின்
பொருட்கள் கதவுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட
நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதுடன்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக மருதங்கேணி காவல் நிலையத்தில்
அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுகின்ற வேளையும் காவல்துறையினர் இவர்களை கைது செய்ய
தயங்குவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
