Home இலங்கை அரசியல் ஜப்பான் மீண்டது போல் இலங்கையும் மீண்டெழும் – அமைச்சர் சமந்த நம்பிக்கை

ஜப்பான் மீண்டது போல் இலங்கையும் மீண்டெழும் – அமைச்சர் சமந்த நம்பிக்கை

0

உலகப் போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டது. முற்றாக அழிந்த அந்த
நாடு மீண்டெழுந்தது. அவ்வாறான அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு
நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

எதிரணிகளும் ஒத்துழைக்க வேண்டும்

மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல
வழிகளிலும் உதவிகள் கிடைக்கப் பெற்றன.

அடுத்த கட்டமாக மீள் கட்டுமானப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான
உதவிகளும் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுனாமி காலத்தில் இருந்த அரசாங்கம் போன்றது அல்ல தற்போதைய அரசாங்கம். சர்வதேச
நாடுகளுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நாட்டுக்காக உதவிகளை வழங்கி வருகின்றன.
உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட பின்னர் அந்த நாடு மீண்டெழுந்தது. மக்கள்
ஒன்றிணைந்து செயற்பட்டனர். நாமும் அவ்வாறு செயற்பட வேண்டும். எதிரணிகளும்
ஒத்துழைக்க வேண்டும். இலங்கை நிச்சயம் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version