Home இலங்கை சமூகம் தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ். கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள்

தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ். கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள்

0

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி யாழ். கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் யாழ் மாநகர சபையின்
ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் வியாபாரத்தில்
ஈடுபட்டு வருகின்ற மரக்கறி சந்தை வியாபாரிகள் பின்வருமாறு தமது கோரிக்கையினை
முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், எமது
சந்தை யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்டு இயங்கி வருகின்றது.

வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்

பொலிஸ் முறைப்பாடு

நாம் சந்தை
குத்தகை பணத்தையும் மாநகர சபைக்கு செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் கடந்த
மூன்று வருடங்களாக கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து எமது சந்தைக்கு
எதிரே உள்ள வீதியோரத்தில் தனியார் ஒருவர் மரக்கறி சந்தையினை நடாத்தி
வருகின்றார்.

இது குறித்து நாம் யாழ். மாநகர சபைக்கு அறிவித்திருந்தோம். இந்நிலையில் மாநகர
சபை குறித்த பகுதி நல்லூர் பிரதேச சபைக்கு உரிய இடம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து நல்லூர் பிரதேச சபைக்கும் முறையிட்டோம்.
பின்னர் இதற்கு பொலிசாரிடம் முறையிடுமாறும் கோரப்பட்டது.

பொலிஸாரிடமும் முறையிட்டோம் மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு
தண்டபணம் விதிக்கபட்ட பொழுதிலும் அவர்கள் மேன்முறையீடு செய்து தற்பொழுதும்
கடையினை நடாத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில் நாம் வடமாகாண ஆளுநர் உட்பட
சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவித்த போதும், இதுவரை எதுவும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளனர்.

வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்

தம்பியின் முன்கோபம் காரணமாக அண்ணன் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version