Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு திட்டம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு திட்டம்!

0

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

இதனுடன் 11 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த 223 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 139 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்… போட்டியில் களமிறங்கியுள்ள புதிய நிறுவனம்

கூடுதல் எண்ணிக்கை

கம்பஹா கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை அண்டிய பகுதியில் 144 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 90.85 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகள் நிர்மாணிப்பு 

கொச்சிக்கடை தேவாலயத்தை அண்டிய பகுதியில் எட்டுக் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகள் நிர்மாணிப்பதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version