யாழ். (Jaffna) வடமராட்சி – கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான மேலுமொரு
பேருந்து சேவையானது இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தனியார்
பேருந்து சங்கத்தினரால் இது தொடங்கப்பட்டுள்ளது.
சேவை நேரம்
குறித்த பேருந்து சேவையானது, காலை 09.45 மணிக்கு கேவிலில் இருந்து புறப்பட்டு
மருதங்கேணி, புதுக்காடு வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்து மீண்டும் மாலை 03.35
மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கேவிலை
சென்றடையும்.
இந்நிகழ்வில், வடமராட்சிக் கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர்
மற்றும் செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவையாளர், இளைஞர்கள் என
பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.