Home முக்கியச் செய்திகள் யாழில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் பலி

யாழில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் பலி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது.

ஒருவர் உயிரிழப்பு

அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு சென்றுள்ளனர்.

அதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/jaffna-man-dies-from-poisonous-insect-bite-1724923166?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version