Home முக்கியச் செய்திகள் யாழில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே 19 வயது இளைஞன் பலி

யாழில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே 19 வயது இளைஞன் பலி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் சுன்னாகம் பகுதியில் இன்று (29.03.2025) இடம்பெற்றுள்ளது.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுன்னாகம் – கந்தரோடை, பழனிகோவிலடி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் சிறு காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலதிக தகவல் – கஜிந்தன், பிரதீபன்

https://www.youtube.com/embed/jEUxgHA9iuc

NO COMMENTS

Exit mobile version