Home இலங்கை அரசியல் பொலிஸாரை அழைத்து சபையை நடாத்துவேன்.. எச்சரித்த முதல்வர்! யாழ். மாநகர சபையில் குழப்பம்

பொலிஸாரை அழைத்து சபையை நடாத்துவேன்.. எச்சரித்த முதல்வர்! யாழ். மாநகர சபையில் குழப்பம்

0

பொலிஸாரை அழைத்து சபையை நடத்துவேன் என யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட விளம்பர பதாகை தொடர்பில் யாழ். மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

சபையில் அமைதியின்மை

குறித்த விளம்பரப் பலகை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகவும் அதற்கு மாநகர சபை உத்தியோகத்தர்கள் உடந்தையாக இருந்ததாகவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்போது, சபையில் அமைதியின்மை ஏற்பட்டதால் முதல்வர் மதிவதனி பொலிஸாரை அழைத்து சபையை நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

NO COMMENTS

Exit mobile version