Home இலங்கை அரசியல் இன்று அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை ..! யாழ். மாநகர சபையின் புதிய மேயர் யார்

இன்று அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை ..! யாழ். மாநகர சபையின் புதிய மேயர் யார்

0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் (Jaffna Municipal Council
) மேயர் பதவியை கைப்பற்ற மூன்று கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

யாழ் மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (12) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு 23 ஆசனங்கள் தேவை.

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி 13, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12, தேசிய மக்கள் சக்தி 10,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP), ஜனநாயக தமிழ்த் தேசிய
கூட்டணி ஆகியவை தலா 4, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஆகியன தலா ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.

யாழ். மாநகர சபையில் ஆட்சி 

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மேயராக
விவேகானந்தராஜா மதிவதனி, பிரதி மேயராக இம்மானுவல் தயாளன்
ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அகில இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்
தேசிய கூட்டணியும் கூட்டாக செயல்பட இணக்கம் எட்டியுள்ளன.

இதன்
படி, அந்த கூட்டணியின் சார்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கனகையா சிறீ கிருஷ்ணா மேயர் பதவிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் துரைராஜா ஈசன் பிரதி மேயர்
பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கவில்லை

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன்
போட்டியிடுவார் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நிறைவேற்று குழு
உறுப்பினரும் அமைச்சருமான இ. சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயககட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய
தேசிய கட்சி (UNP) ஆகியன இலங்கை தமிழ்அரசுக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும்,இந்தக் கட்சிகள் தமது உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version