Home முக்கியச் செய்திகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய கொடியேற்றம் நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய கொடியேற்றம் நாளை

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy kovil) ஆலய வருடாந்த மகோற்சவம் நாளையதினம் (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்டு தோறும் பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க அலங்காரக் கந்தனின் கொடியேற்றம் இடம்பெறும்.

திருவிழாவை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு ஆலய வீதி விழாக் கோலம் பூண்டுள்ளது.

போக்குவரத்து தடை

நல்லூர் கோவில் வருடாந்த பெருவிழா 2025 ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.

மகோற்சவ திருவிழாக்களின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவும் நடைபெறும்.

அத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு மகோற்சவம் நிறைவு பெறும்.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுவீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version