Home இலங்கை அரசியல் யாழ்.விமான நிலையத்தை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

யாழ்.விமான நிலையத்தை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

0

திருகோணமலை, சிகிரியா உள்நாட்டு விமான நிலையத்தையும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தையும் மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version