யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றையதினம்(21.12.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்,
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி
சூசைதாசன் ஆகியோர் விருந்தினர்களாக பங்குபற்றியிருந்தனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள்
அத்துடன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும்
கலந்துகொண்டனர்.