Home உலகம் முன்பே எச்சரித்துள்ள சவூதி: 200க்கும் மேற்பட்ட ஜேர்மனியர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

முன்பே எச்சரித்துள்ள சவூதி: 200க்கும் மேற்பட்ட ஜேர்மனியர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

0

கிறிஸ்துமஸ் சந்தையில் ஐந்து பேரைக் கொன்று 200க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய சந்தேகநபர் குறித்து சவூதி அரேபியா ஜேர்மன் அதிகாரிகளுக்கு பல எச்சரிக்கைகளை முன் கூட்டியே விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் ஜேர்மன் ஊடகங்களால் தலேப் ஏ. என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சவுதி ஜேர்மனியை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கைகள் 

“நோட்ஸ் வெர்பல்” என்று அழைக்கப்படும் இந்த அறிவிப்புகள் ஜேர்மன் உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் புறக்கப்பணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் இருந்து தப்பியோடியவராக கருதப்படும் சந்தேகநபரை 2007 மற்றும் 2008 க்கு இடையில் ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தக் கோரப்பட்டுள்ளது.

வலதுசாரி  கட்சிக்கு ஆதரவு

அந்த நபரின் பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணம் காட்டி ஜேர்மன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் தனது அரசியல் கருத்துக்களை எதிர்த்த வெளிநாட்டில் உள்ள சவுதிகளை துன்புறுத்தியுள்ளதாகவும் சவுதி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் தீவிர வலதுசாரி ஜேர்மன் கட்சியான Alternative for Germany (AfD) யின் ஆதரவாளராக மாறியதாகவும், தீவிர இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களை வளர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version